நடத்தை விதிமுறை

From mediawiki.org
This page is a translated version of the page Code of Conduct and the translation is 76% complete.

இது விக்கிஊடகத் தொழில்நுட்ப வெளிகளுக்கான நடத்தை விதிமுறை அல்லது நெறிமுறை ஆகும். இது இருவகைப் புறநிலை வெளிகளுக்கும் பொருந்தும். இவற்றில் விக்கிஊடகத் தொழில்நுட்ப நிகழ்வுகளும் பிற நிகழ்வுகளின் தொழில்நுட்ப உரைப்புகளும் இணைய வெளிகளும் அடங்கும்.(MediaWiki.org, wikitech.wikimedia.org, Phabricator, Gerrit, technical mailing lists, technical IRC channels, Etherpad, விக்கிஊடக அறக்கட்டளை இயக்கும் மற்றபிற வளர்ச்சி சார்ந்த வெளிகள் ஆகியன அடங்கும்).

கொள்கைகள்

திறந்த நல்ல வரவேற்கத்தகுந்த சமுதாயத்தை வென்றெடுக்கும் ஆர்வத்தில், விக்கிஊடகத் தொழில்நுட்பத் திட்டங்களில் மதிப்புநல்கும் தொல்லையற்ற பங்கேற்பை அனைவருக்கும் உறுதிப்படுத்த விழைகிறோம். இதில் பாலினம், பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு, பாலுணர்வு, பாலுணர்வுப்போக்கு, மாற்றுத்திறன்நிலை, நரம்பூனங்கள்,புறநிலைத் தோற்றம், உடற்பருமையளவு, இனம், இனக்குழு, நாட்டினப் பாகுபாடு, அகவை வேறுபாடு, அரசியல் சார்பு. சமயம் போன்ற பாகுபாடுகள் பாராட்டக்கூடாது.

மற்ற உறுப்பினர்களின் உரிமைகளையும் கடப்பாடுகளையும் மதித்து போற்றுவதில் தொழில்நுட்பத் திறமைகளோ சமுதாய வகிபாகமோ தலையிடக்கூடாது. புதுவரவாளர்களும் தமது பங்களிப்பில் மிகக் குறைவான பட்டறிவே உள்ளவர்களும் நல்ல மனப்பாங்கோடு ஆக்கநிலை வாய்ந்த பின்னூட்டங்களை வழங்க தகுதியானவர்களே ஆவர். காத்திரமான பங்களிப்பும் தொழில்நுட்பத் திறமைகளும் தாழ்செந்தர நடத்தைக்கு ஊக்கமளிக்கக்கூடாது.

ஏற்கமுடியாத நடத்தை

விக்கிஊடகத் தொழில்நுட்ப வெளிசார் பொது அரங்கிலும் தனிப் புழங்குதலிலும் தொல்லைப்படுத்தலும் மற்றவகை தகவற்ற நடத்தைகளும் ஏற்கவியலாதனவாகும். எடுத்துகாட்டுகளாக பின்வருவன அடங்கும் என்றாலும் அவைமட்டும் முழுமையானவை அல்ல:

  • தனிநபர் தாக்குதல், கொடுமை இழைத்தல், கொடுமைசார் அச்சுறுத்தல், வெளிப்படையான மறிப்புவேலைகள்.
  • தாக்குதல், கேவலப்படுத்தல், பாகுபடுத்தல் சார்ந்த பழிப்புரைகள்.
  • தன்னுகர்வு சார்ந்த, தலைப்போடு பொருந்தாத பாலுணர்வு மொழியையோ படிமங்களையோ பயன்படுத்தல்.
  • தகவற்ற, தேவையற்ற கவன ஈர்ப்பு, தொடுகை, உடற்சீண்டல் (பாலுணர்வு சார்ந்தோ சாராமலோ).
  • தகவற்ற, தேவையற்ற பொது அல்லது தனிவெளித் தொடர்பாடலுடன் தொடரும் கொடுமை வடிவம்.
  • தேவையற்ற ஒளிப்படம் எடுத்தலும் பதிவு செய்தலும்.
  • தனிநபரின் சம்மதமின்றி அவரது அடையாளத்தையோ சொந்தத் தகவலையோ வெளிப்படுத்தல். ஓர் அடையாளத் தகவலை வெளிப்படுத்தலே பிற தனி அடையாளத் தகவலை வெளிப்படுத்துவதற்கான சம்மதம் ஆகாது.
  • தகவற்ற, தேவையற்ற தனித் தொடர்பாடலின் வெளியீடு. வீளையிடுதலையோ தொல்லைப்படுத்தலையோ அறிவிக்கும் நோக்கத்திற்காக தனித் தொடர்பாடலையோ சொந்த அடையாளத் தகவலையோ வெளியிடுதலும் அறிவித்தலும் ஏற்கக் கூடியதே.
  • விவாதத்துக்கு ஊறு விளைவித்தல், தொடர்ச்சியான குறுக்கீடு, குலைவு போன்ற முறைகளால் சமுதாய ஒத்துழைப்பைத் தடுத்தல்.
  • விளிம்புநிலை, பேராளிகளால் காக்கப்படாத குழுக்கள் பாலான பாகுபாடு. இத்தகைய குழுக்கள் சார்ந்த பரப்புரை ஏற்கப்படுவதோடு ஊக்கப்படுத்தப்படும்.
  • நடத்தைநெறிமுறைப் பிறழ்வை அறிவிப்பதற்காகவன்றி, நடத்தை விதிமுறையைப் பயன்படுத்தல் (எ.கா:ஓர் அறிவிப்பாளர் அல்லது தாக்குதலுக்கு உட்பட்டோரின் மேல் அவர்களது துலங்கல் அல்லது எதிர்வினை தொல்லைப்படுத்தலாக அமைவதாக எதிர்த்தல்).
  • Committee அல்லது மேல்முறையீட்டு அமைப்பின் முடிவினை மறுக்க/எதிர்க்க முயலல், எ. கா.: குழு நீக்கிவைத்தவரை நீக்கிவைத்த காலத்தில் விடுவித்தல்.

ஒரு பிரச்சனையை தெரிவிக்க

தீங்கிழைக்கும் அச்சுறுத்தல்கள் அல்லது மற்ற நெருக்கடி சூழல்களில், (முடிந்தால்) உரிய அதிகாரமுள்ளவர்களுக்கு அறிவிக்கவும். மேலும், email the Wikimedia Foundation via emergency@wikimedia.org (more information).

ஏற்கவியலாத நடத்தையை காண/ உணர நேர்பவர் பின்வரும் மூன்று படிநிலைகளைப் பின்பற்றலாம்:

  1. ஏற்கவியலாதபடி நடந்துகொள்பவரை அப்படி நடந்துகொள்ளாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளவும்.வருக்கு நடத்தை விதிமுறையை நினைவுபடுத்தவும்.
  2. ஒரு நிகழ்வில் உள்ளபோது இதை நிகழ்வின் ஏற்பாட்டாளர்களிடமோ அல்லது அதற்கென பொறுப்பு வழங்கப்பட்டவரிடமோ தொடர்புகொள்ளவும்.
  3. பிரச்சினையை நேரடியாக Code of Conduct Committeeக்கு techconduct@wikimedia.org வழியாக அறிவிக்கவும். வேறெங்கோ முன்பொரு நிகழ்வை அறிவித்து அதற்கு தகுந்த நடவடிக்கி மேற்கொள்லப்படவில்லை எனக் கருதினால் உரிய குழுவுக்கு நேரடியாக அறிவிக்கலாம்.

அறிக்கைகள் பொது அறிவிப்புகளைப் போல சுருக்கமாக உரிய இணைப்போடு அனுப்பலாம். என்ன நடக்கிறது என்பதை அறிய கூடுதல் கீழ்வரும் தகவல்கள் எங்களுக்கு உதவும்.

  • உங்களை அடையாளப்படுத்த விரும்பினால், உங்கள் தொடர்புத் தகவல் (எ. கா: விக்கிஊடக, புனைவாளர் சார்ந்த பயனர்பெயர்கள்).
  • நிகழ்வு குறித்த உங்களது விவரிப்பு:
    • எப்போது, எங்கு நடந்தது.
    • ஏற்கவியலாத நடத்தை பற்றிய விளக்கமான விவரிப்பு.
    • ஈடுபட்டது யார், தைப் பார்த்தது யார்.
    • நிகழ்வு இன்னமும் தொடர்கிறதா.
  • பிரச்சினைப் நாங்கள் புரிந்துகொள்வதற்கான கூடுதல் தகவல் அதாவது, முந்தைய நேர்வுகள் சிறப்பு நிலைமைகள் போன்ற தகவல்.
  • நேர்வுக்கான பொதுவெளிப் பதிவுகள், ஏதேனும் இருந்தால்.
  • நிகழ்வின் காட்சிப் படம்.

அறிக்கைகள் கமுக்கமாகக் கையாளப்படும். கூடுதலான தகவலுக்கு, காண்க Confidentiality.

அறிக்கைகளைக் குழு கையாளும் முறைகளை அறிய, Code of Conduct/Casesசுக்குச் சென்றுபார்க்க.

சார்பு ஆவணங்களும் மீள்பயன்பாடும்

இந்நடத்தை நெறிமுறை பின்வருவனவற்றில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

Contributor Covenant (revision 49054013), the jQuery Code of Conduct (revision 91777886), the Open Code of Conduct (v1.0), and the Citizen Code of Conduct; இதில் விக்கிஊடக நட்புவெளிக் கொள்கையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Text from the Contributor Covenant and the jQuery Code of Conduct is used under the MIT Licence (Contributor Covenant has changed its licence to CC BY 4.0 now). The text from the Open Code of Conduct is used under a Creative Commons Attribution licence. The text from the Citizen Code of Conduct is used under a Creative Commons Share-alike Attribution licence. The overall text is under MediaWiki.org's standard licence (CC BY-SA 3.0).

We value each other's contributions and each contributor's commitment to making our technical spaces friendly spaces for everyone. We encourage other projects to adopt and adapt this code of conduct regardless of whether they use Wikimedia technical infrastructure.

மேலும் பார்க்க