குறிப்புகள்:பைவிக்கித் தானியக்கம்/பருந்துப் பார்வை
Pywikibot |
---|
|
பைவிக்கித் தானியக்கம் (Pywikibot) என்பது ஒரு பைதான் நூலகம் ஆகும். இது மீடியாவிக்கித் தளங்களில் செய்ய வேண்டிய பணிகளைத் தானியங்குபடுத்தும் கருவிகளின் தொகுப்பு ஆகும். இது முதலில் விக்கிப்பீடியாவுக்காக வடிவமைக்கப்பட்டது. இப்போது விக்கிமீடியா அறக்கட்டளையின் பல திட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டம் 2003இல் தொடங்கப்பட்டது. இது தற்போது 9.3.1 பதிப்பாக உள்ளது. இது முழு API பயன்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும் புதிய மீடியாவிக்கி அம்சங்களையும் பைதோனிக் தொகுப்புத் தளவமைப்புடன் புதுப்பித்த நிலையில் உள்ளது. ஆனால் இது MediaWiki 1.27 அல்லது அதற்கு முற்பட்ட பழைய நிறுவல்களிலும் வேலை செய்கிறது.
பைத்தானின் இணக்கமான பதிப்பைப் பயன்படுத்தும் போது, மைக்ரோசாப்ட் விண்டோஸ், மேக்சு, லினக்சு ஆகிய இயங்கு தளங்களிலும் பைவிக்கித் தானியக்கம் இயங்கும் தன்மையுடையது என்பது குறிப்பிடத்தக்கது. பைத்தானின் இணக்கமான பதிப்பு நிறுவப்பட்ட வேறு எந்த இயக்க முறைமையிலும் இது இயங்கும். நீங்கள் பைத்தான்தான் நிறுவியுள்ளீர்களா என்பதை முதலில் சரிபார்க்கவும், அதன் பதிப்பைக் கண்டறியவும், CMD அல்லது செல்(Shell) அல்லது முனையத்தில் "python" எனத் தட்டச்சுச் செய்யவும்.
Python 3.7 or higher is currently required to run the bot.
Python can be downloaded here.
Download
$ python -m pip install pywikibot
For more information, see here.
கூறுகள்
நூலகக் காப்பகத்தில் இரண்டு முதன்மைக் கோப்புறைகள் உள்ளன:
- பைவிக்கித் தானியக்கம் (
pywikibot
) அனைத்து முதன்மைக் கோப்புகளையும் கொண்டுள்ளது. அவை மீடியாவிக்கி இணையதளங்களுடன் தொடர்பு கொள்ளும். இது நூலகத்தின் முதன்மைப் பகுதியாகும்: உங்கள் சொந்த பைத்தான் நிரலாக்கங்களில் PWB-யை ஏற்றும்போதும், பிளக்-அண்ட்-ப்ளே கருவிகளைத் தொடங்கும்போதும் அவை பயன்படுத்தப்படும். scripts
ஏற்கனவே எழுதப்பட்ட, தெரிந்ததும் நிரூபிக்கப்பட்டதுமான நிரல்களைக் கொண்டுள்ளது. அவை பயன்படுத்தத் தயாராக உள்ளன. ஒவ்வொன்றின் பட்டியலையும் ஆவணத்தையும் Manual:Pywikibot/Scripts இல் பார்க்கவும்.
See also
உரிமம்
Pywikibotக்கான உரிமக் கோப்புகளை இங்கே பார்க்கலாம்.